முடி சுருட்டையா இருந்தா இப்படி பராமரிக்கணும்!

By Ishvarya Gurumurthy G
11 Feb 2024, 16:41 IST

இயற்கையாகவே சுருட்டை முடி இருப்பது வரமாக இருந்தாலும், அதை சமாளிப்பதென்பது சாபமாக இருக்கிறது. இதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை இங்கே காண்போம்.

சல்பேட் இல்லாத ஷாம்பு

பல ஷாம்பூகளில் சல்பேட் அதிகம் இருக்கும். இவை முடியின் இயற்கையான எண்ணெய்களை அகற்றி, வறட்சி மற்றும் உரித்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். சுருட்டை முடியைப் பொறுத்தவரை, அவை ஏற்கனவே வறட்சியாக தான் இருக்கும். எனவே முடியை மேலும் சேதப்படுத்தாத சல்பேட் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்துவது நல்லது.

கண்டிஷனர் பயன்பாடு

சுருட்டை முடியானது நேரான முடியை விட உலர்ந்ததாக இருக்கும். இதனால் சுருட்டை முடி உடையவர்களுக்கு அதிக ஈரப்பதம் தேவை. ஒரு நல்ல தரமான கண்டிஷனரை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், முடியை நீரேற்றத்துடனும், உதிர்தல் தன்மை இல்லாமலும் வைத்திருக்க முடியும்.

அடிக்கடி முடியை அலச வேண்டாம்

சுருட்டை முடி உடையவர்கள் அடிக்கடி முடியை அலசுவது, முடியை மேலும் வறட்சியாக மாற்ற வழிவகுக்கும். மேலும் முடி உதிர்வை ஏற்படுத்தும். இதனால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை முடியை அலசுவது நல்லது.

அகல பல் சீப்பு பயன்படுத்தவும்

சுருட்டை முடியில் அதிக சிக்கு ஏற்படும். அப்போது நெறுங்கிய பல் கொண்ட சீப்பை பயன்படுத்துவது முடி உடைவதற்கு வழிவகுக்கும். அதனால் முடியை அலசிய பின், கை விரலால் முடியை மெதுவாக பிரிக்க வேண்டும். பின் அகலமான பல் கொண்ட சீப்பை பயன்படுத்தவும்.

வெப்பம் சார்ந்த ஸ்டைலிங் வேண்டாம்

தட்டையான மற்றும் முடியை சுருள் செய்ய பயன்படுத்தும் வெப்பம் சார்ந்த ஸ்டைலிங் கருவிகளை தவிர்க்க வேண்டும். இதனை பயன்படுத்தினால் முடி சேதமடையும். முடிந்தவரை இது போன்ற கருவிகளை தவிர்க்கவும்.