முடி பளபளப்பாக வளர சூப்பர் டிப்ஸ்.!

By Ishvarya Gurumurthy G
12 Feb 2024, 10:18 IST

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கான தீர்வு, நாம் சாப்பிடும் மற்றும் நம் தலைமுடியில் பயன்படுத்தும் பொருட்களில் தான் உள்ளது. அந்த அத்தியாவசிய பொருட்கள் இங்கே.

புரதம்

முடி வளர்சிக்கு கெரட்டின் என்ற புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பெற முட்டை, மீன், இறைச்சிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் முடியின் வேருக்கு ஊட்டமளிக்கவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளில் சால்மன் மீன்கள், ஆளிவிதை, சியா விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவை அடங்கும்.

பயோட்டின்

வைட்டமின் B7 என்று அழைக்கப்படும் பயோட்டின், ஆரோக்கியமான முடிக்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், முடி உதிர்வதைத் தடுக்கிறது. முட்டை, பாதாம், பிஸ்தா, முந்திரி வகைகள், முழு தானியங்கள் மற்றும் பச்சை இலை காய்கறிகள் உட்பட பல உணவுகளில் பயோட்டின் காணப்படுகிறது.

இரும்புச்சத்து

ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு இரும்புச்சத்து அவசியமானதாகும். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு தேவையான ஆக்ஸிஜனை முடி வேருக்கு கொண்டு செல்ல இரும்புச்சத்து உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு காரணமாக முடி உதிர்தல் ஏற்படலாம். இதனால் முடி மெலிந்தும் போகலாம்.

துத்தநாகம்

ஆரோக்கியமான கூந்தலுக்கு துத்தநாகம் அவசியமிக்க ஒன்றாகும். துத்தநாகம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. துத்தநாகம் நிறைந்த உணவுகளில் சிப்பிகள், மெல்லிய இறைச்சிகள், பீன்ஸ் மற்றும் நட்ஸ் ஆகியவை அடங்கும்.

வைட்டமின் டி

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வைட்டமின் டி இன்றியமையாத ஒன்றாகும். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு தேவையான முடி வேர் சுழற்சியை சீராக்க இந்த வைட்டமின் உதவுகிறது. வைட்டமின் டி குறைபாட்டால் முடி உதிர்தல் ஏற்படும். மற்றும் முடி மெலிந்துவிடும்.