குளிர்காலத்தில் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சனைகளில் முடி உதிர்தல், முடி வறண்டு போகுதல் போன்றவை அடங்கும். இந்த கால கட்டத்தில் அதிகளவிலான முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும். இது வறண்ட வெளிப்புறக் காற்றினால் ஏற்படுவதாகும்
நீரிழப்பு
வறண்ட காற்றினால் உச்சந்தலையில் உள்ள ஈரப்ப்பதம் உறிஞ்சப்பட்டு நீரிழப்பு ஏற்படுகிறது. இது முடி உடைதல், மெலிதல் மற்றும் உதிர்வு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே இந்த காலகட்டத்தில் முடி உதிர்வைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும்
முடி தயாரிப்புகள்
குளிர்காலத்திற்கு ஏற்ற முடி தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், முடி உதிர்வைக் குறைக்கலாம். அதே சமயம், தேர்ந்தெடுக்கப்பட்ட கூறுகள் தலைமுடியை பலப்படுத்தும்
ஈரமான முடியைத் தவிர்ப்பது
குளிர்காலத்தில் ஈரமான முடியுடன் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் முடி உறைந்தும், உடைந்தும் போகலாம். எனவே தலைமுடியை உலர்ந்த பிறகு வெளியில் செல்லலாம்
அதிகம் கழுவ வேண்டாம்
தலைமுடியை அதிகளவு கழுவுவதால், முடிக்கு ஊட்டமளிக்கும் இயற்கை எண்ணெய்கள் இழக்கப்படுகின்றன. குளிர்காலத்தில் இந்த எண்ணெய்கள் தலைமுடியில் நீடித்திருக்க, முடி கழுவுதல்களுக்கு இடையேயான இடைவெளியை நீடிக்க வேண்டும்
எண்ணெய் தடவுதல்
குளிர்காலத்தில் உடி உதிர்வை நிறுத்த வாரம் இருமுறை எண்ணெய் மசாஜ் செய்வது சிறந்த நுட்பமாகும். இதற்கு ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஜோஜோபா எண்ணெயை முயற்சிக்கலாம்
ஹீட் ஸ்டைலிங் தவிர்த்தல்
தலைமுடியை வெப்பம் இல்லாமல் உலர வைப்பது நல்லது. இது தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். ஹீட் ஸ்டைலிங் பயன்பாடு தலைமுடியின் ஈரப்பதத்தை இழக்க வைத்து, முடி உடையும் அபாயத்தை அதிகரிக்கிறது
நீரேற்றமாக வைத்திருத்தல்
குளிர்காலத்தில் முடி பராமரிப்பிற்கு ஈரப்பதத்தை தக்கவைப்பது அவசியமாகும். எனவே ஈரப்பதத்தை மீட்டெடுக்க வாரத்திற்கு ஒரு முறை லீவ்-இன் கண்டிஷனரைப் பயன்படுத்தலாம்