மருதாணி பல ஆண்டுகளாக தலைமுடிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் ஒருசில கலவையை கலந்தால் தலைமுடி கருப்பாக மாற உதவும்.
முடிக்கு வண்ணம் பூசுவதற்கு ஹென்னா மிகவும் நல்லது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் நிறமடைவது மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பீட்ரூட்டை துருவி தண்ணீரில் கொதிக்க வைத்து இதை மருதாணியில் கலந்து தலைக்கு தடவினால், முடி கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
மருதாணி பேஸ்டுடன் 2 ஸ்பூன் செம்பருத்தி பூ பொடி சேர்த்து, நன்றாக கலந்து தலை முடியில் தடவவும். இது தலைமுடிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கும்.
ஷாம்பு, கண்டிஷனர், செயற்கை கருப்பு மைக்கு பதிலாக மருதாணியை முடிக்கு தடவுவது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.