முடி வெடிப்பை தடுக்க சூப்பர் டிப்ஸ்!

By Ishvarya Gurumurthy G
28 Jan 2024, 11:22 IST

மாசு மற்றும் வறட்சி காரணமாக முடி நுனியில் வெடிப்பு ஏற்படுகிறதா? இதனை தடுக்க என்ன வழிகள் இருக்கிறது என்பதை இங்கே காண்போம்.

முடி வெட்டவும்

மாதத்திற்கு ஒரு முறை முடி நுனியை கொஞ்சம் வெட்டவும். இது வெடிப்பை தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

தலை குளியல்

நீங்கள் தினமும் தலை குளிக்காதீர்கள். இது உங்கள் முடியை வறட்சியாக்கும். இதனால் வெடிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக வாரத்திற்கு இரண்டு முறை முடியை அலசவும்.

ஷாம்பூ வேண்டாம்

கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ, உங்கள் முடியை சேதப்படுத்தும். இதனால் முடி வெடிப்பு ஏற்படலாம். இதற்கு நீங்கள் சீகைக்காய் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.

சீப்பு தேர்வு

முடி சேதமடைவதை தடுக்க அகன்ற பல் கொண்ட சீப்பை பயன்படுத்தவும். இது முடி உதிர்வை குறைக்கும்.

எண்ணெய் தடவவும்

முடியை காய விடாமல் அவ்வப்போது எண்ணெய் தடவவும். இது முடி உடைவை தடுத்து, முடியை ஈரப்பதமாக வைத்திருக்கும்.

கலர் செய்யாதீர்கள்

நீங்கள் முடிக்கு டை பயன்படுத்துவது கெடுதல். அதில் உள்ள கெமிக்கல் முடியை பொலிவிழக்கச் செய்யும். இதனால் முடி வெடிப்பு பிரச்னை ஏற்படும்.

ட்ரையர் வேண்டாம்

தலை குளித்த பின் மென்மையான பருத்தி துணி கொண்டு முடியை துடைக்கவும். ட்ரையர் யூஸ் செய்ய வேண்டாம். இது முடி உடைவுக்கு வழிவகுக்கும்.

உணவு

முடிக்கு தேவையான பையோட்டின் மற்றும் போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.