தலைமுடிக்கு சரியாக எண்ணெய் தடவுவதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். முடிக்கு எண்ணெய் தடவுவதன் சிறந்த வழி, தலைமுடியின் வகை மற்றும் பயன்படுத்தும் எண்ணெயைப் பொறுத்ததாகும். இதில் முடிக்கு சரியாக எண்ணெய் தடவுவதற்கான சில குறிப்புகளைக் காணலாம்
எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது
முடி வகைக்கு ஏற்ற எண்ணெயைத் தேர்ந்தெடுக்கலாம். அதாவது வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய், உதிர்ந்த முடிக்கு ஆர்கான் எண்ணெய், முடி வளர்ச்சிக்கு ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்
எண்ணெயை சூடாக்கவும்
முடிக்கு எண்ணெயைப் பயன்படுத்தும் முன்னதாக எண்ணெயை சிறிது சூடாக்க வேண்டும். இது முடி மற்றும் உச்சந்தலையில் நன்றாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதற்கு பாத்திரம் ஒன்றில் எண்ணெயை சில நிமிடங்கள் வைத்து சூடாக்கலாம்
பிரித்து எண்ணெய் வைப்பது
தலைமுடியைப் பிரித்து, முடியில் எண்ணெய் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்கு தலைமுடியை பகுதிகளாக பிரித்து பயன்படுத்தலாம்
உச்சந்தலையில் மசாஜ் செய்வது
பிறகு உச்சந்தலையில் நேரடியாக எண்ணெயைத் தடவி, விரல் நுனியில் வட்ட இயக்கங்களில் முடியை மசாஜ் செய்ய வேண்டும். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டி, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக முடி உதிர்வு, வறட்சியான பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும்
முடி வழியாக விநியோகிப்பது
உச்சந்தலையில் மசாஜ் செய்த பிறகு தலைமுடியின் நீளத்திற்கு, குறிப்பாக முனைகளில் எண்ணெய் தடவ வேண்டும். சீரான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கு கைகள் அல்லது பரந்த பல் சீப்பைப் பயன்படுத்தலாம்
எவ்வளவு நேரம் வைப்பது?
தலைமுடி எண்ணெய் ஊட்டச்சத்தைப் பெறுவதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் அல்லது 1 மணி நேரம் எண்ணெயை முடியில் அப்படியே வைக்க வேண்டும்
அதிகப்படியான எண்ணெயைத் தவிர்ப்பது
தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப சரியான அளவு எண்ணெயை முடிக்கு பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அதிகப்படியான எண்ணெயைக் கழுவுவது கடினமாக இருக்கலாம்
எண்ணெயை அகற்றுதல்
எண்ணெயைத் தடவிய பிறகு, முடியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்ற லேசான ஷாம்பூவைக் கொண்டு தலைமுடியை நன்கு கழுவ வேண்டும். மேலும், முடி சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்த இருமுறை ஷாம்பு செய்யலாம்