தயிர் மற்றும் எலுமிச்சை
அரை கிண்ணம் தயிர் எடுத்து அதில் 3 முதல் 4 துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இதை கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செ்யவும். பின் 10 முதல் 20 நிமிடம் கழித்து தலையை அலசவும்.
முடிக்கு ஊட்டச்சத்து
உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்தை வழங்க தயிர் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை பயன்படுத்தலாம். இதில் லாக்டிக் அமிலம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ மற்றும் பி ஆகியவற்றின் பண்புகள் நிறைந்துள்ளன.
முடி வளர்ச்சி நன்மைகள்
முடி வளர்ச்சியை மேம்படுத்த தயிர் மற்றும் எலுமிச்சையின் உதவியை பெறலாம். இதில் உள்ள புரதம் மற்றும் கால்சியம் பண்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
ஹேர் மாஸ்க்
தயிர், எலுமிச்சை ஹேர் மாஸ்க் முடியின் வறட்சியை நீக்கும். இது முடிக்கு இயற்கையான ஈரப்பத்தை வழங்கும் பண்புகளை கொண்டுள்ளது.
பொடுகுத் தொல்லை
பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த தயிர் மற்றும் எலுமிச்சை ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
குறிப்பு
கூந்தலில் தயிரை உபயோகிப்பது தயிர் வாசனையை ஏற்படுத்தும். எனவே கண்டிப்பாக ஷாம்பு போட்டு வாஷ் செய்வது நல்லது.