முடி சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்கவும், முடி ஆரோக்கியத்திற்கும் துத்தநாகம் ஒரு அத்தியாவசிய கனிமமாகும். இதில் முடி ஆரோக்கியத்திற்கு ஜிங்க் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்
முடி வளர்ச்சிக்கு
துத்தநாகம் முடியின் மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது செல் மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் முடி வளர்ச்சியை துரிதப்படுத்தலாம்
மயிர்க்கால்களை பலப்படுத்த
முடியை வேர்களில் இருந்து பலப்படுத்த துத்தநாகம் உதவுகிறது. இவை முடி உடைவதைக் குறைத்து, வலுவான, அதிக மீள்திறன் கொண்ட இழைகளை ஊக்குவிக்கிறது
கொலாஜன் உற்பத்திக்கு
முடி அடர்த்தியை ஊக்குவிக்க உதவும் கொலாஜன் உற்பத்தியில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இது முடியை பலப்படுத்தவும், அடர்த்தியாக வைக்கவும் உதவுகிறது
பொடுகை எதிர்த்துப் போராட
ஜிங்கில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் பொடுகுத் தொல்லையைக் குறைத்து உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
ஜிங்க் நிறைந்த உணவுகள்
இயற்கையான முடி வளர்ச்சிக்கு உணவில் கீரை, பூசணி விதைகள், பயறு, கொண்டைக்கடலை மற்றும் சிப்பிகள் போன்ற ஜிங்க் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்லலாம்