நாள்பட்ட மன அழுத்தம் காரணமாக, முடி நுண்குழாய் ஸ்டெம் செல்கள் சேதப்படுத்தப்பட்டு, முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. இது முடி மெலிவடைதலுக்கும் வழிவகுக்கும். மேலும் இது வழுக்கை புள்ளிகளை ஏற்படுத்தக்கூடும். இதில் மன அழுத்தம் முடி வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காணலாம்
முடி வளர்ச்சி சுழற்சி
முடி வளர்ச்சியானது அனஜென், கேட்டஜென் மற்றும் டெலோஜென் போன்ற மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உடல் மன அழுத்தத்தில் இருக்கும் போது கார்டிசோல் ஹார்மோனை உருவாக்கி, முடி வளர்ச்சி சுழற்சியை சீர்குலைக்கிறது
முடி உதிர்தல்
முடி நுண்குழாய்கள் ஓய்வு கட்டத்தில் இருக்கும்போது, முடி மிக எளிதாக உதிர்ந்து விடும் அபாயம் உள்ளது. இதில் ஸ்டெம் செல்கள் புதிய திசுக்களை மீண்டும் உருவாக்காவிட்டால், முடி உதிர்தலுக்கு வழிவகுக்கலாம்
மன அழுத்த ஹார்மோன்கள்
அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது முடி நுண்குழாய் ஸ்டெம் செல்களை ஓய்வு நிலைக்கு கொண்டு வந்து, முடியை மீண்டும் உருவாக்குவதைத் தடுக்கிறது
முடி உதிர்தல் வகைகள்
மன அழுத்தம் தொடர்பான முடி உதிர்தலில் சில வகைகள் உள்ளன. அதைப் பற்றி காணலாம்
ட்ரைக்கோட்டிலோமேனியா
இது புருவங்கள், உச்சந்தலை அல்லது உடலின் பிற பகுதிகளில் இருந்து முடி உதிர்வுக்கான தூண்டுதலைக் குறிக்கிறது. இது பதற்றம், மன அழுத்தம் அல்லது பிற எதிர்மறை உணர்வுகளைச் சமாளிக்கும் ஒரு வழியாக இருக்கலாம்
அலோபீசியா அரேட்டா
இது முடி உதிர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு தன்னுடல் தாக்க நோயைக் குறிக்கிறது. இதற்கு கடுமையான மன அழுத்தம் ஒரு காரணியாக அமைகிறது
டெலோஜென் எஃப்லூவியம்
அதிகளவிலான மன அழுத்தம் அதிக எண்ணிக்கையிலான முடி நுண்குழாய்களை ஓய்வு நிலைக்குள் நுழையச் செய்கிறது. இதன் காரணமாக திடீரென முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது