உங்க முடி நல்ல சைனிங்கா இருக்கணுமா? இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க

By Gowthami Subramani
07 Jun 2024, 17:30 IST

மென்மையான மற்றும் ஆரோக்கியமான முடியைப் பெற வீட்டிலேயே சில ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். இதில் மென்மையான முடிக்கு உதவும் ஹேர் மாஸ்க்குகளைக் காணலாம்

தயிர் ஹேர் மாஸ்க்

எலுமிச்சை சாறு அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற பொருள்களுடன் தயிர் பயன்படுத்துவது முடியை பலப்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள லாக்டிக் அமிலம் உச்சந்தலையை சுத்தப்படுத்தவும், அழுக்குகளை அகற்றவும் உதவுகிறது

தேன் ஹேர் மாஸ்க்

சுத்தமான தேனில் சிறிதளவு தண்ணீர் கலந்து பயன்படுத்துவதன் மூலம் முடி மென்மையாக மற்றும் பளபளப்பாக இருப்பதை உணரலாம்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை தேங்காய் எண்ணெய் அல்லது வேறு சில அத்தியாவசிய எண்ணெய்களுடன் கலந்து முடிக்கு பயன்படுத்தலாம். எரிச்சலூட்டும் உச்சந்தலையை அமைதிப்படுத்தி ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் பிரகாசத்தைத் தருகிறது

பழுத்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்

இந்த ஹேர் மாஸ்க் செய்ய, பழுத்த வாழைப்பழங்களை ஒரு மென்மையான பேஸ்டாக பிசைந்து, அதில் தேன் அல்லது தேங்காய் பால் சேர்த்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவி வர முடி ஈரப்பதமாக இருப்பதுடன், முடி உதிர்வைக் குறைக்கிறது

முட்டை ஹேர் மாஸ்க்

தேன் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றுடன் முட்டையைப் பயன்படுத்துவது முடியை வலுப்படுத்துவதுடன், வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் முடிக்கு பொலிவை சேர்க்கிறது