பொடுகை அடித்து விரட்ட உதவும் சூப்பர் வீட்டு வைத்தியங்கள்

By Gowthami Subramani
03 Nov 2024, 12:18 IST

இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலரும் முடி சார்ந்த பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் பொடுகு சார்ந்த பிரச்சனையும் அடங்கும். இதில் பொடுகை நீக்க உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்

வெந்தய ஹேர் மாஸ்க்

வெந்தய ஹேர் மாஸ்க் தயார் செய்ய, ஓரிரவு முழுவதும் ஊறவைத்த இரு தேக்கரண்டி வெந்தய விதைகளை பேஸ்ட்டாக உருவாக்கி, உச்சந்தலையில் தடவலாம். இது பொடுகுத் தொல்லைக்கு எதிராகப் போராட உதவுகிறது

வெங்காய ஹேர் மாஸ்க்

இது சிறந்த பூஞ்சை காளான், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. தலைமுடிக்கு இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது பொடுகை நீக்க உதவுகிறது. மேலும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது

கற்பூரம், தேங்காய் எண்ணெய்

இந்த கலவையானது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பை நீக்கி பொடுகை நீக்க உதவுகிறது. மேலும் இதன் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் வீக்கம் மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இவை பூஞ்சை வளர்ச்சியைத் தணித்து, பொடுகை குறைக்கிறது

எலுமிச்சை, கடுகு எண்ணெய்

எலுமிச்சை சாறு, கடுகு எண்ணெய் இரண்டுமே பொடுகு நீங்க உதவுகிறது. இவை பொடுகை ஏற்படுத்தும் கூடுதல் கட்டமைப்பை அகற்றி, தலைமுடியை பிரகாசமாக வைக்க உதவுகிறது

வேம்பு, மஞ்சள் கலவை

இவையிரண்டுமே ஆண்டிமைக்ரோபியல், பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை பொடுகு சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாகவும், உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது

முல்தானி மெட்டி

இதில் உள்ள பல்வேறு முக்கிய தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள், உச்சந்தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் அரிக்கும் தோலழற்சியைத் தடுக்க உதவுகிறது. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது