சங்குப் பூ தரும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா?

By Gowthami Subramani
13 Jun 2025, 17:51 IST

அன்றாட உணவில் நாம் சேர்க்கும் சில காய்கறிகள், பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த வரிசையில் பூக்களும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் உடல் ஆரோக்கியத்திற்கு சங்கு பூ தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

நீரிழிவு நோய்க்கு

சங்கு பூவை சர்க்கரை நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைக்கு உதவும் தாவர அடிப்படையிலான உணவுகளை இணைத்து செயல்பாட்டு உணவுகளை உருவாக்க உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

இந்த பூக்களின் விதைகள் மற்றும் வேர்களின் சாறுகள் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இவை இதய ஆரோக்கியத்திற்கு நேர்மறையான விளைவுகளைத் தருகிறது

உயர் இரத்த அழுத்தத்திற்கு

சங்கு பூ டையூரிடிக் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது நீரின் வெளியேற்றத்தை அதிகரிக்கவும், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது

ஆஸ்துமா நோயாளிக்கு

சங்குப் பூவில் உள்ள எத்தனாலிக் சாறு, ஆஸ்துமா எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்

மாதவிடாய் பிரச்சனைக்கு

மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும் வகையில் சங்குப் பூ உதவுகிறது. இதன் இலைகளைக் கழுவி சுத்தம் செய்து, அதன் இலைச் சாற்றை மிஸ்ரி மற்றும் தண்ணீருடன் சேர்த்து சில நாள்கள் குடிக்கலாம்

காய்ச்சல் குணமாக

சங்கு பூவை எடுத்துக் கொள்வது சருமத்திற்கு அடியில் உள்ள இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம் காய்ச்சலைக் குறைக்கிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது

முடி உதிர்வைத் தவிர்க்க

சங்கு பூவை பயன்படுத்துவது முன்கூட்டிய நரை மற்றும் வழுக்கை போன்ற முடி சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மயிர்க்கால்களை ஊட்டமளிக்கவும் உதவுகிறது