தலைப் பேன்கள் எளிதில் பரவக்கூடியதாகும். குறிப்பாக, பள்ளி வயது குழந்தைகள் அல்லது பராமரிப்பின் கீழ் உள்ள குழந்தைகளிடையே இது மிகவும் பொதுவானவையாகும். எனினும் சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் குழந்தைகளில் காணப்படும் தலைப் பேன்களை எளிதில் அகற்றலாம்
வேப்ப எண்ணெய்
இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாகும். இந்த பண்புகள் பேன்களைக் கொல்லவும், அரிப்பு உச்சந்தலையை ஆற்றவும் உதவுகிறது. இதற்கு முடியில் வேப்ப எண்ணெயைத் தடவி, 30 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவலாம்
வினிகர் பயன்பாடு
அமிலத்தன்மை நிறைந்த வினிகரைப் பயன்படுத்துவதன் மூலம் பேன் மற்றும் அதன் முட்டைகளை எளிதில் அகற்றலாம். இதற்கு சம அளவில் வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து, முடியில் தடவி சீவ வேண்டும்
கற்பூரம் & தேங்காய் எண்ணெய் கலவை
இந்தக் கலவையைப் பயன்படுத்துவது பேன்களை எளிதில் அகற்ற வழிவகுக்கிறது. மேலும் இது தலையில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்கிறது
வெங்காயச் சாறு
வெங்காயம் சல்பர் நிறைந்ததாகும். இது பேன்களைக் கொல்ல உதவுகிறது. இதற்கு ஒரு வெங்காயத்தை எடுத்து, அதன் சாற்றைப் பிரித்தெடுத்து, உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் வைத்து பிறகு கழுவலாம்
டீ ட்ரீ ஆயில் ஸ்ப்ரே
டீ ட்ரீ ஆயிலை தண்ணீருடன் கலந்து, அதன் சில துளிகளை உச்சந்தலையில் தெளிக்க வேண்டும். இது இயற்கையான பேன் விரட்டியாக வேலை செய்கிறது
பேன் சீப்பு பயன்படுத்துவது
ஈரமான முடியை பேன் சீப்பால் தொடர்ந்து சீப்புவதன் மூலம் பேன் மற்றும் அதன் முட்டைகளை திறம்பட அகற்ற முடியும்
முடி கழுவுதல்
வழக்கமான முடி கழுவுதல் மற்றும் சரியான சுகாதாரத்துடன், இந்த வைத்தியங்களைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் முடியில் பேன் இல்லாமல் பாதுகாக்கலாம். எனினும் புதிய பொருள்களைப் பயன்படுத்தும் குழந்தை நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது