7 நாட்களில் முடி உதிர்வு சரியாக இந்த இலைகளை சாப்பிடுங்க!

By Karthick M
21 Jun 2025, 21:16 IST

முடி உதிர்வு பிரச்சனையை தடுக்க சில செடிகளின் இலைகளை பயன்படுத்தலாம், இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் வைட்டமின்-பி, வைட்டமின்-சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. இது உச்சந்தலைக்கு ஊட்டமளிப்பதுடன் முடி உதிர்வையும் தடுக்கிறது.

ரோஜா இதழ்கள்

ரோஜா இதழ்கள் உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவும்.

செம்பருத்தி இலைகள்

செம்பருத்தி இலைகளில் அதிக ஈரப்பதம் உள்ளது. இது உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. இது முடியை பலப்படுத்துவதோடு, முடி உதிர்தலையும் குறைக்கிறது.

கொய்யா இலைகள்

கொய்யா இலைகளில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது முடி உதிர்வை குறைக்க உதவுகிறது. இது உச்சந்தலையில் புரதத்தை உற்பத்தி செய்கிறது.

வேப்ப இலைகள்

வேப்ப இலைகளில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் செப்டிக் பண்புகளை கொண்டது. இது உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.