கோடை வெப்பத்தில் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது கடினமாகத் தோன்றலாம். ஆனால், இந்த காலத்தில் உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கவும், வறட்சி, முடி உதிர்தல் மற்றும் வெயிலில் இருந்து தலைமுடி சேதமடைவதைப் பாதுகாக்கவும் சிறந்த வழிகளில் ஒன்று எண்ணெய் வைப்பதாகும்
ஈரமான கூந்தலில் தடவுவது
எண்ணெய் தடவுவதற்கு முன் முடியை லேசாக ஈரப்படுத்தலாம். இது எண்ணெயை சமமாக விநியோகிக்க உதவுகிறது. மேலும், எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறது
விரல் நுனிகளைப் பயன்படுத்துவது
சில துளிகள் எண்ணெயை எடுத்து, உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்த்து, விரல் நுனியைப் பயன்படுத்தி உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது உச்சந்தலையை அதிக எண்ணெய் பசையாக மாற்றாமல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது
இலகுரக எண்ணெய்களைப் பயன்படுத்துவது
அடர்த்தியான எண்ணெய்களுக்குப் பதிலாக பாதாம், தேங்காய் அல்லது ஆர்கான் எண்ணெய் போன்ற இலகுவான எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இவை விரைவாக உறிஞ்சப்பட்டு, தலைமுடிக்கு அதிக எடை போடாமல் தடுக்கிறது
எவ்வளவு நேரம் வைக்கலாம்?
கோடையில் இரவு முழுவதும் எண்ணெயை விட வேண்டிய அவசியமில்லை. எண்ணெயைத் தடவி 1-2 மணி நேரத்திற்கு முன்பாக கழுவலாம். இது உச்சந்தலையில் அதிக ஒட்டும் தன்மை இல்லாமல் இருக்க உதவுகிறது
சூடான துண்டைக் கொண்டு சுற்றிக் கொள்வது
எண்ணெய் தடவிய பிறகு, சூடான துண்டைக் கொண்டுச் சுற்றிக் கொள்ள வேண்டும். இது துளைகளைத் திறந்து, அதிகமாகப் பயன்படுத்த வேண்டிய அவசியமின்றி எண்ணெய் ஆழமாக ஊடுருவ உதவுகிறது