நீளமா, அடர்த்தியா முடி வளர பூசணி விதை எண்ணெய் தரும் நன்மைகள்

By Gowthami Subramani
22 Feb 2025, 15:26 IST

முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் பூசணி விதை எண்ணெய் மிகுந்த நன்மை பயக்கும். இதில் தலைமுடி ஆரோக்கியத்திற்கு பூசணி விதை எண்ணெய் தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

உச்சந்தலை ஆரோக்கியம்

பூசணி விதை எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையை ஆற்றவும், எரிச்சலைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது சிறந்த இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான முடி நுண்ணறைகளை ஆதரிக்கவும் உதவுகிறது

முடியை வலுப்படுத்த

இந்த எண்ணெயில் துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்களும், தாதுக்களும் உள்ளது. இது முடி இழைகளை வலுப்படுத்துவதுடன், முடி உடைவதைத் தடுக்கிறது. மேலும், இது முடியின் ஒட்டுமொத்த அமைப்பை மேம்படுத்துகிறது

முடி மெலிவதைக் குறைக்க

முடி உதிர்தலுடன் தொடர்புடைய ஒரு ஹார்மோனான டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோனின் (DHT) செயல்பாட்டைத் தடுக்க பூசணி விதை எண்ணெய் உதவுகிறது. இது DTH-ஐத் தடுப்பதன் மூலம், முடி மெலிவதைக் குறைக்கிறது மற்றும் முடி மீண்டும் வளர அனுமதிக்கிறது

ஈரப்பதத்தை தக்கவைக்க

பூசணி விதை எண்ணெய் முடி மற்றும் உச்சந்தலையை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. இதன் மூலம் வறட்சி, பொடுகு மற்றும் உரிதலைத் தடுக்கலாம்

பயன்படுத்துவது எப்படி?

சிறந்த முடிவுகளைப் பெற முடி மற்றும் உச்சந்தலையில் பூசணி விதை எண்ணெயை நேரடியாக தடவலாம். இதை 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை விட்டு, பிறகு கழுவலாம். நாள்தோறும் இதைப் பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான, ஆரோக்கியமான முடியைப் பெறலாம்