அழகான, மென்மையான கூந்தலுக்கு ஆனியன் ஆயில் தரும் நன்மைகள்

By Gowthami Subramani
28 Jan 2025, 17:19 IST

வெங்காய எண்ணெய் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய எண்ணெய்களில் ஒன்றாகும். இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் தலைமுடி ஆரோக்கியத்திற்கு வெங்காய எண்ணெய் தரும் நன்மைகளைக் காணலாம்

முடி உதிர்தலைத் தடுக்க

வெங்காய எண்ணெய் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. இது முடி உடைவதைக் குறைக்கவும், அதிகப்படியான முடி உதிர்தல் மற்றும் மெலிவதைத் தடுக்கவும் உதவுகிறது

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த

வெங்காய எண்ணெயை உச்சந்தலையில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முடியின் நுண்ணறைகள் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனைப் பெறுவதற்கு வழிவகுக்கிறது

மென்மையான முடிக்கு

வெங்காய எண்ணெயின் வழக்கமான பயன்பாடு முடியின் அமைப்பை மேம்படுத்தி பளபளப்பாகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது. மேலும் இது முடியை நிர்வகிக்கக் கூடியதாகவும் மாற்றுகிறது

உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு

வெங்காய எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் நிறைந்துள்ளது. இது பொடுகு, அரிப்பு போன்ற உச்சந்தலை தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. மேலும், ஆரோக்கியமான உச்சந்தலையைப் பராமரித்து சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

முன்கூட்டியே நரைப்பதைக் குறைக்க

வெங்காய எண்ணெயில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுப்பதன் மூலம் முன்கூட்டியே நரைப்பதைக் குறைக்கிறது. மேலும், தலைமுடியை கருமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது

தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் வெங்காய எண்ணெயைச் சேர்ப்பதன் மூலம் காலப்போக்கில் வலுவான மற்றும் ஆரோக்கியமான முடியைப் பெறலாம்