முடி வளர்ச்சியில் தேங்காய் எண்ணெய் எவ்வளவு நன்மை பயக்கும் தெரியுமா? இதனால் தலைமுடிக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
தாங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய் மிக சிறந்த தேர்வாக இருக்கும். இது முடி ஆரோக்கியத்திற்கு சிறந்து திகழ்கிறது.
தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். இது முடி உதிவை தடுத்து, முடி வளர்ச்சியை தூண்டும். மேலும் இதனை தடவுவதற்கு முன் குறைவாக சூடுபடுத்தவும்.
நீங்கள் இரவு தூங்கும் முன் தலையில் தடவி அப்படியே விடவும். பின் காலை எழுந்த உடல் இதனை மென்மையான ஷாம்பு கொண்டு கழுவவும்.
தேங்காய் எண்ணெயுடன் லெமன் மற்றும் கற்பூரம் சேர்த்து தலையில் தடவினால், அது பொடுகு பிரச்னையை போக்கும்.
உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களாலும் உங்கள் முடி வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனவே, எதையும் முறையாக பயன் படுத்தினால் இரட்டிப்பு நன்மையை பெறலாம்.