முடி கொட்டும் பிரச்சனையை பலர் எதிர்கொள்கின்றனர். உடலில் சில சத்துக்கள் குறைபாட்டால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது. அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
முடி கொட்ட காரணம்
உடலில் சில வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் முடி கொட்டுகிறது. அத்தகைய நிலையில் உணவில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.
வைட்டமின் டி குறைபாடு
வைட்டமின் டி குறைபாட்டால் முடி உதிரத் தொடங்குகிறது. இதனால் முடி உயிரற்றதாகவும் மெல்லியதாகவும் மாறுகிறது. இந்த வைட்டமின் முட்டையின் மஞ்சள் கரு, மீன், வலுவூட்டப்பட்ட பால் உள்ளிட்டவைகளில் உள்ளது.
வைட்டமின் ஏ குறைபாடு
வைட்டமின் ஏ குறைபாட்டால் முடி பலவீனமடையும். இது அதிகரிக்க ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, கேரட், கேப்சிகம் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
வைட்டமின் ஈ குறைபாடு
வைட்டமின் ஈ குறைபாடு காரணமாக முடிகள் பிளவு அடையலாம். இது கீரை, பாதாம், வெண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களில் உள்ளது.
வைட்டமின் சி குறைபாடு
வைட்டமின் சி குறைபாடு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி, தோல் கருமை மற்றும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படலாம். இது ப்ரோக்கோலி, கேப்சிகம், சிட்ரஸ் பழங்களில் உள்ளது.
உடலில் இந்த வைட்டமின்களை அதிகரித்தால் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.