முடி கருகருன்னு வளர... தேங்காயை வச்சி வீட்டிலேயே ஷாம்பு தயாரிக்கலாம்!
By Kanimozhi Pannerselvam
25 Sep 2024, 18:01 IST
தேங்காய்
தேங்காய் உச்சந்தலையை குளிர்விக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வை குறைக்கவும் உதவுகிறது. அதை பயன்படுத்தி ஷாம்பு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்
ஒரு கிண்ணத்தில் தண்ணீரை எடுத்து அதில் அரை கப் திரவ காஸ்டிங் சோப்பை சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பிறகு அதில் கால் கப் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
இப்போது அதில் கால் கப் ஆலிவ் எண்ணெய், ஐந்து ஸ்பூன் தேங்காய் பால், சிறிது ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தேன் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்
இவை அனைத்தையும் நன்றாகக் கலந்த பிறகு, அதில் 10 சொட்டு தேயிலை மர எண்ணெயைச் சேர்த்து கிளற வேண்டும்.
ஊட்டச்சத்துக்கள்
தேங்காய் எண்ணெ முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. தேயிலை மர எண்ணெய் வலுவான பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது. இது பொடுகை எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்த ஷாம்பூவில் இருக்கும் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் உச்சந்தலையின் வறட்சியை போக்குகிறது மற்றும் முடி சேதத்தை குறைக்கிறது.