தலைக்கு சுடுநீர் யூஸ் பண்றீங்களா.? இத பாருங்க.

By Gowthami Subramani
10 Jan 2024, 10:55 IST

குளிர்காலத்தில் மக்கள் பலரும் குளிப்பதற்கு வெந்நீரையே பயன்படுத்துவர். இந்த சூழ்நிலையில் தலைமுடிக்கும் வெந்நீரை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கலாம். இதில் தலைமுடியை வெந்நீரில் கழுவுவதால் ஏற்படும் தீமைகளைக் காணலாம்

வறட்சி

வெந்நீரில் முடியைக் கழுவுவது முடி வறட்சியை ஏற்படுத்துகிறது. தலையை கழுவுவதற்கு வெந்நீருக்குப் பயன்படுத்துவது முடியின் இயற்கையான எண்ணெயை நீக்கி வறட்சியை ஏற்படுத்தலாம்

பொடுகு

தலைமுடிக்கு வெந்நீர் பயன்படுத்துவதால் உச்சந்தலை வறண்டு போகலாம். இந்த சூழ்நிலையில் உச்சந்தலையின் ஈரப்பதம் குறைகிறது. இதனால், பொடுகு பிரச்சனையைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம்

அரிப்பு

வெந்நீரில் தலையை அலசும் போதும், உச்சந்தலையில் செதில்களாக உருவாகலாம். இதுவே அரிப்பு மற்றும் பொடுகு போன்றவை ஏற்பட காரணமாகிறது

முடி உதிர்வு

தலைமுடியை வெந்நீரில் கழுவுவதால் ஏற்படும் முக்கிய விளைவு முடியின் வேர்களை வலுவிழக்கச் செய்து முடி உதிர்வு பிரச்சனையை உண்டாக்கும்

தூசி படிவதற்கான வாய்ப்பு

தலைமுடியை சுடுநீரில் கழுவுவதால், சூடான நீர் உச்சந்தலையின் துளைகளைத் திறக்கிறது. இதில் தூசி மற்றும் அழுக்கு போன்றவை சேர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது

முடியைத் தண்ணீரில் எப்படி கழுவலாம்?

உச்சந்தலையை சுத்தம் செய்வதற்கு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்த வேண்டும். விரும்பினால், சாதாரண நீரையும் பயன்படுத்தலாம்

வெந்நீரைத் தலைமுடிக்குப் பயன்படுத்துவதால், இந்த முடி தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும். எனவே முடிக்கு வெந்நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்