ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு சில பயோட்டின் நிறைந்த உணவுகள் உதவுகிறது. இதில் முடி வளர்ச்சியைத் தூண்டும் பயோட்டின் உள்ள உணவுகளைக் காணலாம்
நட்ஸ் மற்றும் விதைகள்
பயோட்டின் நிறைந்த பாதாம், சூரியகாந்தி விதைகள் போன்றவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
பருப்பு வகைகள்
வேர்க்கடலை, சோயாபீன்கள் போன்றவற்றில் பயோட்டின் நிறைந்துள்ளது. இது முடி அடர்த்தியாக வளர உதவுகிறது
இறைச்சி
கோழி, மாட்டிறைச்சி போன்றவற்றின் கல்லீரல் பயோட்டின் நிறைந்த சூப்பர் ஆதாரங்களாகும். இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
மஞ்சள் கரு
முட்டையின் மஞ்சள் கருவில் பயோட்டின்கள் நிறைந்துள்ளது. ஒரு முழு சமைத்த முட்டையில் 10 Mcg அளவிலான பயோட்டின்கள் உள்ளது
இனிப்பு உருளைக்கிழங்கு
சமைத்த இனிப்பு உருளைக்கிழங்கு ஊட்டச்சத்து மிகுந்த சத்தான மூலமாகும். இதிலுள்ள பயோட்டின்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
அவகேடோ
வெண்ணெய் பழமான அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்த தேர்வாக அமையும். இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் நன்மை பயக்கும்