இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க ஊட்டச்சத்து மிகுந்த விதைகளை எடுத்துக் கொள்ளலாம். விதைகளில் புரதம், இரும்புச்சத்து, ஒலிக் அமிலம், புரதம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, ஈ போன்றவை நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சிக்கு ஏற்றதாகும்
ஆளி விதைகள்
இது முடி உதிர்வைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. ஆளி விதைகளில் உள்ள நார்ச்சத்து, புரதம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை முடியின் மயிர்க்கால்களுக்கு நன்மை தருகிறது
வெந்தய விதைகள்
இதில் நியாசின், புரதம், பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை உள்ளது. இது முடி உதிர்தலைக் குறைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதை தலைமுடிக்கு நேரடியாகவோ, பச்சையாகவோ, ஊறவைத்தோ எடுத்துக் கொள்ளலாம்
எள் விதைகள்
கருப்பு, வெள்ளை எள் இரண்டிலுமே தாதுக்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இது முடிக்கு பிரகாசம், வலிமையைத் தருகிறது. மேலும் இதை சாலட்கள், ஸ்டிர் ஃப்ரைஸ் போன்றவற்றில் பயன்படுத்தலாம்
சூரியகாந்தி விதைகள்
இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் துத்தநாகம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இது சுற்றுச்சூழலிலிருந்து தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்க உதவுகிறது
கருஞ்சீரக விதைகள்
இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. இதன் மூலம் உச்சந்தலையில் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. இது சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவுகிறது