இயற்கை எண்ணெய்கள்
சில இயற்கையான அத்தியாவசிய எண்ணெய்களைக் கொண்டு முடி வளர்ச்சி செயல்முறையை விரைவுபடுத்தலாம். இது முடியின் அமைப்பு மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
புதினா எண்ணெய்
இந்த எண்ணெய் பயன்படுத்துவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
ரோஸ்மேரி எண்ணெய்
முடியின் தடிமன் மற்றும் முடி வளர்ச்சியை மேம்படுத்த விரும்புபவர்கள், ரோஸ்மேரி எண்ணெய் ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இது முடியில் செல்லுலார் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது
லாவெண்டர் எண்ணெய்
இந்த எண்ணெய் முடி வளர்ச்சியின் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இது செல்களை வளர்ப்பதற்கும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவுகிறது. இதில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
எலுமிச்சை எண்ணெய்
எலுமிச்சைப்பழத்தை முடிக்குப் பயன்படுத்துவது பொடுகு மற்றும் முடி வளர்ச்சிக்கு ஏற்றதாக அமைகிறது. ஏனெனில் இது அடர்த்தியான மற்றும் மென்மையான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
தேயிலை எண்ணெய்
இது முடி உச்சந்தலையை சுத்தப்படுத்தி பராமரிக்க உதவுகிறது. தேயிலை எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உச்சந்தலையில் ஆழமாக ஊடுருவி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது