முடி வளர்ச்சியானது உணவுமுறை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் போன்ற பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படும் இயற்கையான செயல்முறையாகும். அதன் படி, உணவில் ஊட்டச்சத்து நிறைந்த பழச்சாறுகளை அருந்தலாம். இதிலுள்ள தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
கீரை சாறு
கீரை வகைகளில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஃபோலேட், சிலிக்கா மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிரம்பியுள்ளது. இது உச்சந்தலையில் ஊட்டமளித்து மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது
தேங்காய் தண்ணீர்
இது எலக்ட்ரோலைட் நிறைந்த உடலின் ஒட்டுமொத்த நீரேற்றத்திற்கு உதவும் சிறந்த பானமாகும். இது முடி ஆரோக்கியத்தில் மறைமுகமாக பங்களிக்கிறது
கற்றாழை சாறு
கற்றாழை சாறு முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது ஆரோக்கியமான உச்சந்தலை சூழலை ஊக்குவிக்கிறது
ஆம்லா சாறு
இது ஒரு பிரபலமான ஆயுர்வேத தீர்வாகும். இந்த நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகிறது. இவை முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
வெள்ளரி சாறு
வெள்ளரி சாறு சிலிக்கா உள்ளடக்கம் கொண்டதாகும். இது ஈரப்பதத்தை அளிக்கிறது. இது முடிக்கு வலிமையையும், பிரகாசத்தையும் தருகிறது
கிவி சாறு
இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது
பீட்ரூட் சாறு
பீட்ரூட்டில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் நிறைந்ததாகும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் முடியின் மயிர்க்கால்களுக்கு அதிக ஊட்டச்சத்தை வழங்குகிறது
கேரட் சாறு
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கும், சரும உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது