நரைமுடியை கருப்பாக்க இந்த ஆயிலை ட்ரை பண்ணுங்க

By Gowthami Subramani
14 Dec 2024, 12:37 IST

நரை முடியை கருமையாக்க பலரும் இயற்கையான வழிகளைத் தேடுகின்றனர். இதற்கு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட எண்ணெய்கள் மிகவும் மென்மையான மற்றும் பயனுள்ள தீர்வாக அமையும். இதில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் எண்ணெய்களைக் காணலாம்

கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்

புதிய கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் சேர்த்து, இலைகள் கருப்பாகும் வரை வதக்க வேண்டும். இதை வடிகட்டி தடவுவதன் மூலம் நரைப்பதைக் குறைத்து, பளபளப்பைத் தருகிறது

ஆம்லா, தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் காய்ந்த நெல்லிக்காயை சேர்த்து கருமையாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டி, உச்சந்தலையில் மசாஜ் செய்வது, ஆரோக்கியமான முடியை மேம்படுத்த உதவுகிறது

பிரிங்ராஜ் எண்ணெய்

எள் எண்ணெயில் பிரிங்ராஜ் மூலிகையை வதக்கி பிரிங்ராஜ் எண்ணெயை தயார் செய்யலாம். இந்த ஆயுர்வேத தீர்வானது முடி நிறமியை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது

பிளாக் டீ, பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயை வலுவான பிளாக் டீயுடன் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்துவது இயற்கையான நிறத்தை அளிப்பதுடன், கூடுதல் ஊட்டத்தை அளிக்கிறது

செம்பருத்தி, தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி இலைகளை சேர்த்து தலைமுடிக்குப் பயன்படுத்துவது முடியை வலுப்படுத்துவதுடன், நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது

மருதாணி, கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயில் மருதாணி இலையை சிறிது எரியும் வரை சூடாக்க வேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டி பயன்படுத்துவது காலப்போக்கில் இயற்கையாகவே முடியை கருமையாக்க உதவுகிறது