நரைமுடி கருப்பாக மாற இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க

By Gowthami Subramani
29 Sep 2024, 13:39 IST

பொதுவாக, நரை முடி முதுமையின் இயற்கையான பகுதியாகும். ஆனால், தற்காலத்தில் இளம் வயதிலேயே இந்த பிரச்சனையைச் சந்திக்கின்றனர். எனினும், இந்த முடி இழைகளை இயற்கையாகவே கருமையாக்க சில முடி எண்ணெய்கள் உதவுகிறது

சில ஊட்டச்சத்து மிக்க எண்ணெய்கள் தலைமுடியின் இளமை நிறத்தை ஊட்டமளிக்கிறது. இதில் நரைமுடியைக் கருப்பாக்க உதவும் எண்ணெய்களைக் காணலாம்

தேங்காய் எண்ணெய்

தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது முடியின் தண்டுக்குள் ஆழமாக ஊடுருவி, நரைப்பதைத் தடுக்கிறது. இது முடியை வளமாகவும், துடிப்பாகவும் மாற்றுகிறது

எள் எண்ணெய்

முடிக்கு எள் எண்ணெயைப் பயன்படுத்துவது முடியை கருமையாக்கவும், அதன் அதிக ஊட்டச்சத்துக்களால் முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது

ஆம்லா எண்ணெய்

இது வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த எண்ணெய் ஆகும். இது காலப்போக்கில் நரை முடியை கருமையாக்கவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது

கருஞ்சீரக எண்ணெய்

இந்த எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி அமைப்பை மேம்படுத்தவும், முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது

பிரிங்ராஜ் எண்ணெய்

பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் இந்த எண்ணெய் நரை முடியை கருமையாக்கவும், அடர்த்தியான, ஆரோக்கியமான முடி இழைகளை மேம்படுத்தவும் உதவுகிறது