ஒரே வாரத்தில் பொடுகை போக வைக்கும் சூப்பர் ஹேர் ஆயில்

By Gowthami Subramani
14 Jul 2024, 06:29 IST

பொடுகைக் கையாள்வது பெரும்பாலும் கடினமானதாகும். மேலும் முடி உதிர்வு பிரச்சனையும் பெரிய பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இதில் பொடுகைக் கையாள்வதற்கு உதவும் இயற்கை எண்ணெய்களைக் காணலாம்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் உள்ள பண்புகள் முடியில் புரத இழப்பைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது வறட்சி மற்றும் சேதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது

ஜோஜோபா எண்ணெய்

ஜோஜோபா எண்ணெய் முடி அமைப்பை மேம்படுத்துவதற்கும், முடி மற்றும் உச்சந்தலையை ஈரப்பதமாக்குவதற்கும் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது பொடுகைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது

ஆலிவ் எண்ணெய்

இதில் வைட்டமின்கள் ஈ மற்றும் கே ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை உலர்ந்த, சேதமடைந்த கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது முடியின் ஈரப்பதத்தை மீட்டெடுக்கவும், முடி உடைவதைத் தடுக்கவும் உதவுகிறது

ஆர்கன் எண்ணெய்

ஆர்கன் எண்ணெயில் உள்ள வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்றவை முடி உதிர்வைக் குறைக்கவும், சேதமடைந்த முடியை சரி செய்யவும் உதவுகிறது

ஆம்லா எண்ணெய்

ஆம்லா எண்ணெயில் வைட்டமின் சி, டானின்கள், கேலிக் அமிலம் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை தலைமுடியின் பொடுகைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது

ஆமணக்கு எண்ணெய்

இதில் உள்ள ரிசினோலிக் அமிலம் முடியை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. இதன் கொழுப்பு அமிலங்கள் முடியின் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. ஆமணக்கு எண்ணெயில் உள்ள கிருமி நாசினி மற்றும் பூஞ்சைக் கொல்லி பண்புகள் பொடுகைக் குறைக்கிறது

ரோஸ்மேரி எண்ணெய்

இந்த எண்ணெய் உச்சந்தலையில் சுழற்சி, மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இதன் பண்புகள் முடி உதிர்வைத் தடுக்கவும், முடி அடர்த்தியை அதிகரிக்கவும் உதவுகிறது

பாதாம் எண்ணெய்

இது உலர்ந்த முடியை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைக்க உதவுகிறது. மேலும் இது க்யூட்டிகல் செல்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை நிரப்பி, முடியின் நெகிழ்ச்சித் தமையை மேம்படுத்டுகிறது