முடி ஆரோக்கியத்திற்கு சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக புரதம் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
கிரேக்க தயிர்
இது புரதம் நிறைந்த உணவாகும். உச்சந்தலையின் இரத்த ஓட்டம் மற்றும் முடி வளர்ச்சிக்கு இவை உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் பி5, முடி உதிர்வதைக் குறைக்க உதவுகிறது
கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் வைட்டமின் சி நிறைந்த பழமாகும். இது முடி உடையாமல் பாதுகாக்க உதவுகிறது. மேலும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது
மெல்லிய புரதம்
தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். குறைவான நிறைவுற்ற கொழுப்புள்ள மெல்லிய இறைச்சிகளை உட்கொள்வது முடி உதிர்வைத் தடுக்கிறது. மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
சால்மன், மத்தி போன்ற மீன்களை உட்கொள்வது பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் போன்றவை முடிக்கு பளபளப்பான பிரகாசத்தை அளிக்கிறது
கீரை
இலை காய்கறி கீரையில் இரும்பு, கரோட்டீன், பீட்டா, ஃபோலேட், வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை நிறைந்துள்ளது. இது சருமம் மற்றும் உச்சந்தலை பராமரிப்பிற்கு உதவுகிறது
முட்டை
முட்டைகள் புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்ததாகும். இதில் உள்ள பயோட்டின் என்ற வைட்டமின் பி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. பயோட்டின் உடையக்கூடிய முடி மற்றும் விரல் நகங்களை வலுப்படுத்த உதவுகிறது
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
இதில் பீட்டாகரோட்டின் என்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது மந்தமான தன்மைக்கு எதிராக பாதுகாக்கிறது. இது முடி வறட்சி அடையாமல் தடுக்க உதவுகிறது