இயற்கையான முறையில் முடி வளர்ச்சிக்கு சில ஆயுர்வேத எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இவை முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
ஏன் ஆயுர்வேத எண்ணெய்கள்
ஆயுர்வேத எண்ணெய்கள் உச்சந்தலையில் முடியை ஈரப்பதமாக்கி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிப்பதுடன், முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது
வேப்ப எண்ணெய்
வேப்ப மரத்தின் விதைகள் மற்றும் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் வேப்ப எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை பொடுகைக் குறைப்பதுடன், முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது
ஆம்லா எண்ணெய்
இந்திய நெல்லிக்காய் அல்லது ஆம்லா முடி வளர்ச்சியைத் தூண்டி, முடிக்கு ஊட்டமளிக்கிறது. இவை முடியின் வலிமை மற்றும் அடர்த்தியை மேம்படுத்துகிறது
பாதாம் எண்ணெய்
இதன் ஊட்டச்சத்துக்கள் சேதமடைந்த முடியைச் சரி செய்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் பண்புகள் முடி வறட்சியைத் தடுக்க உதவுகிறது
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் இன்று பலரும் பயன்படுத்தும் எண்ணெய்களில் ஒன்றாகும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது
ஆமணக்கு எண்ணெய்
இவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும் முடி உதிர்தலைக் குறைக்க உதவுகிறது
பிரிங்ராஜ் எண்ணெய்
பிரிங்ராஜ் மூலிகையின் இலைகள், தண்டுகள் மற்றும் வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் பிரிங்ராஜ் எண்ணெய் முடி சேதமடைவதைத் தடுப்பதுடன், அதன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் இது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது