வெங்காயம், வெந்தயம் இரண்டுமே முடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வெங்காயம், வெந்தயம் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் குறித்து காணலாம்
வெங்காயத்தின் ஊட்டச்சத்துக்கள்
வெங்காயத்தில் வைட்டமின் பி6,பி9, சி, சல்பர், ஆக்ஸிஜனேற்றங்கள், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கெரட்டின் போன்றவை உள்ளது. இவை முடி வளர்ச்சியை ஆதரிக்கும் ஊட்டச்சத்துக்களாகும்
வெந்தயத்தின் ஊட்டச்சத்துக்கள்
வெந்தயம் புரதம், இரும்பும், நிகோடினிக், லெசித்தின், பொட்டாசியம் மற்றும் பயோட்டின் போன்ற முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், சபோனின்கள் போன்ற முடி வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது
வெங்காயம் மற்றும் வெந்தய எண்ணெய்
வெங்காயம் மற்றும் வெந்தயம் இரண்டும் சேர்த்து தயார் செய்யப்படும் எண்ணெயானது பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது
முடி வளர்ச்சியை ஊக்குவிக்க
வெங்காயம் மற்றும் வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்தவும், முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவுகிறது
உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு
இந்த இரண்டு பொருள்களில் உள்ள உச்சந்தலையில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும் பொடுகை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகுக்கிறது
முடி உடைவதைத் தடுக்க
வெங்காயம் மற்றும் வெந்தயம் போன்றவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி மெலிவதைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது முடி உடைவதைத் தடுக்கவும் உதவுகிறது
பயன்படுத்தும் முறை
வெங்காயம் மற்றும் வெந்தயத்தை ஒரு ஹேர் மாஸ்க்கில் பயன்படுத்தலாம் அல்லது உச்சந்தலையில் மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம். வெங்காய சாறு, வெந்தய விதைகள் மற்றும் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் தயாரிக்கப்படும் வெங்காயம் மற்றும் வெந்தய எண்ணெயையும் பயன்படுத்தலாம்