முடிக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது இவ்வளவு நல்லதா?

By Gowthami Subramani
03 Feb 2025, 19:42 IST

முடி வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்திற்கும் ஆலிவ் எண்ணெய் இயற்கையான சக்தியை வழங்குகிறது. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையை வளர்க்கவும், முடி வேர்களை வலுப்படுத்தவும், முடி சேதத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் முடி வளர்ச்சிக்கு ஆலிவ் ஆயில் தரும் நன்மைகளைக் காணலாம்

முடி வளர்ச்சிக்கு

ஆலிவ் எண்ணெயை உச்சந்தலையில் மசாஜ் செய்வது முடி வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இதன் ஊட்டச்சத்துக்கள் முடி வேர்களை எளிதில் சென்று, முடி வளர்ச்சியை வேகமாகவும், ஆரோக்கியமான முறையிலும் வைக்க உதவுகிறது

முடி வேர்களுக்கு ஊட்டமளிக்க

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்கள் ஈ மற்றும் கே, அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது முடி வேர்களை ஆழமாக வளர்க்கவும், முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும் உதவுகிறது

ஆரோக்கியமான உச்சந்தலைக்கு

ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தணிக்க உதவுகிறது. இந்த பண்புகள் பொடுகைக் குறைத்து உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு அவசியமாகும்

முடி சேதத்திலிருந்து பாதுகாக்க

ஆலிவ் எண்ணெய் முடியைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. இது வெப்பம், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் ஸ்டைலிங் பொருட்களிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது. இது முடியின் இயற்கையான வலிமையையும் நெகிழ்வுத்தன்மையையும் பராமரிக்க உதவுகிறது

முடி உதிர்தலைக் குறைக்க

இது முடியின் ஈரப்பதத்தை பராமரித்து வறட்சி மற்றும் பலவீனத்திலிருந்து முடியைப் பாதுகாக்கிறது. இதனால் முடி உதிர்தல் மற்றும் முடி உடைவதை குறைக்கிறது. மேலும் முடியின் தண்டுகளை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் தலைமுடியின் முனைகள் பிளவுபடுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்

எப்படி பயன்படுத்துவது?

2-3 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, உச்சந்தலையில் தடவுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதை 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். ஆழமான கண்டிஷனிங்கிற்கு எண்ணெயை 30 நிமிடங்கள் அல்லது இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். பிறகு லேசான ஷாம்பூ கொண்டு கழுவலாம்