முடி வளர கற்றாழை ஜூஸ் மட்டும் ட்ரை பண்ணாலே போதும். நல்ல முடிவை பெறுவீர்கள். கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
ஊட்டச்சத்து மதிப்பு
கற்றாழை ஜூஸில் என்சைம்ஸ், வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் முடியின் வேர் வரை சென்று முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
நீரேற்றமாக வைத்திருக்கும்
கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கூந்தலுக்கு நீரேற்றம் கிடைக்கும். இதன் மூலம் முடி வரட்சி ஏற்படாமல் இருக்கும். இதனால் முடி வெடிப்பு ஏற்படாது.
கூந்தல் வலுவாகும்
கற்றாழை தலையில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இது கூந்தலை வலுவாக்கும்.
உச்சந்தலை ஆரோக்கியம்
கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதனால் பொடுகு ஏற்படாது.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
கற்றாழை ஜூஸ் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடி அடர்த்தியாக வளரும்.
கற்றாழை ஜூஸ் தயாரிக்கும் முறை
சுத்தமான கற்றாழை இலைகளை எடுத்து, அதில் உள்ள ஜெல்லை பிரித்து எடுக்கவும். இதனுடன் தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அவ்வளவு தான் கற்றாழை ஜூஸ் ரெடி. தினமும் காலையில் இதனை குடித்து வர, முடி செழிப்பாக வளரும்.