முடி ஆரோக்கியத்திற்கு பூண்டு எண்ணெய் மிகுந்த நன்மை பயக்கும். இதில் பூண்டு எண்ணெய் முடி வளர்ச்சிக்கு ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதைக் காண்போம்
முடி வளர்ச்சிக்கு
பூண்டு அதிகளவிலான சல்பர் மற்றும் செலினியம் சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் சல்பர் முடியின் கட்டமைப்பை உருவாக்கும் கெரட்டின் என்ற புரதத்தின் தொகுப்புக்கு உதவுகிறது. மேலும், செலினியம் முடியின் மயிர்க்கால்களை மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த
பூண்டில் உள்ள கலவைகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், பூண்டு எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், ஆக்ஸிஜன் பெறுவதை உறுதி செய்கிறது
தொற்றுக்களைத் தடுக்க
பூண்டில் உள்ள இயற்கையான ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் தொற்றுநோய்களிலிருந்து விடுபட உதவுகிறது
புற ஊதாக்கதிர்களிலிருந்து பாதுகாப்பு
தலைமுடிக்கு பூண்டு எண்ணெய் பயன்படுத்துவது முடியின் மயிர்க்கால்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது
முடி உதிர்வைத் தடுக்க
பூண்டு எண்ணெயின் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வதைக் குறைக்கவும் உதவுகிறது
உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு
பூண்டு எண்ணெயின் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது