ஆயுர்வேத சிகிச்சையில் முடி வளர்ச்சிக்கு வெளிப்புற முடி எண்ணெய்கள், ஹேர் பேக் போன்றவற்றை சிறந்த தேர்வு. இது தவிர, நல்ல உணவு முறையும் கூடுதலாக முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
நல்ல உணவு
புதிய மற்றும் ஆரோக்கியமான உணவுமுறைகளை கையாள்வது உடல் ஆரோக்கியத்துடன், நல்ல முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இவை பக்கவிளைவுகள் இல்லாத சிறந்த முடிவுகளைத் தரலாம்
ஆம்லா
நெல்லிக்காய் சிறந்த மருத்துவ குணங்கள் வாய்ந்ததாகும். இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது. இவை அழற்சி மற்றும் பொடுகு போன்றவற்றை சமாளிக்க உதவுகிறது
மோர்
மோர் அல்லது கொழுப்பற்ற தயிருடன், இரு மடங்கு அளவு தண்ணீர் கலந்து குடிக்கலாம் அல்லது அதை அப்படியே கூந்தலின் மீது பயன்படுத்தலாம். இது ஊட்டச்சத்துக்களை முடி உறிஞ்சுவதற்கு உதவுகிறது
பாதாம்
இயற்கையாகவே கூந்தல் வளர்ச்சிக்கு பாதாம் பெரிதும் உதவுகிறது. இது தவிர, வால்நட்ஸ், சிரோஞ்சி போன்றவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், இதன் இயற்கையான எண்ணெய்கள் முடியை பளபளப்பாகவும், நீடித்ததாகவும் வைத்திருக்க உதவுகிறது
வேர்க்கடலை
இதில் தலைமுடியை வலுவாக மாற்ற உதவுவதற்கான இயற்கையான எண்ணெய்கள் நிறைந்துள்ளன. இதில் கால்சியம், சிலிக்காய் போன்றவை நிறைந்துள்ளன. வேர்க்கடலையில் உள்ள ஜிங்க், மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் பயோட்டின் போன்றவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன
நெய்
ஆயுர்வேதத்தில் தயிர் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ, டி, இ போன்றவை ஆரோக்கியமான முடி, எலும்புகள் மற்றும் சருமத்திற்கு உதவுகின்றன
தேங்காய்
இது பாரம்பரியாகவே நல்ல முடி வளர்ச்சியைத் தூண்டவும், நரைத்தல் மற்றும் பிற முடி பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது
கறிவேப்பிலை
கறிவேப்பிலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை முடி சேதத்தைத் தடுத்து, முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது