ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு இதை ட்ரை பண்ணுங்க!
By Kanimozhi Pannerselvam
26 Sep 2024, 13:30 IST
முடி வலிமை
வெண்டைக்காயில் உள்ள புரோட்டீன் முடி இழைகளை வலுவாக்கி, உடைவதைக் குறைக்கிறது. இது முடியின் நெகிழ்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் சேதத்தைக் குறைக்கிறது.
நீரேற்றம்
வெண்டைக்காயில் உள்ள வலுவலுப்பு தன்மை, ஸ்ட்ராங்கான மாய்சரைசிங் பண்புகளைக் கொண்டுள்ளது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் முடியை ஹைட்ரேட் செய்யலாம். இது முடியை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது
வெண்டைக்காயில் உள்ள வலுவான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படக்கூடிய எரிச்சல், அரிப்பு போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.
பளபளப்பு
வெண்டைகாயில் அடங்கியுள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், இது முடியின் பளபளப்பை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் கூந்தலை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்றுகிறது.
கூந்தல் சேதம்
வெண்டைக்காயில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. எனவே, சேதமடைந்த முடியை சரிசெய்யவும், சேதத்தை குறைக்கவும் உதவுகிறது.
பொடுகு
இதிலுள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகைக் கட்டுப்படுத்தி உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்தும். முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.