முடி வளர்ச்சி, அடர்த்திக்கு பாதாம் எண்ணெய் தரும் நன்மைகள்

By Gowthami Subramani
19 Jan 2025, 20:30 IST

தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவும் எண்ணெய்களில் பாதாம் எண்ணெயும் அடங்கும். இதில் முடி வளர்ச்சிக்கு பாதாம் எண்ணெய் தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

முடி அமைப்பை மேம்படுத்த

தலைமுடிக்கு பாதாம் எண்ணெயைப் பயன்படுத்துவது முடி இழைகளை மென்மையாக்க உதவுகிறது. இது முடி உதிர்வு மற்றும் முடி பிளவு பிரச்சனைகளைக் குறைக்கிறது. மேலும் இது முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது

உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு

பாதாம் எண்ணெயில் வைட்டமின்கள் E மற்றும் D போன்றவை நிறைந்துள்ளது. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது

இயற்கையான பளபளப்பைத் தர

முடிக்கு பாதாம் எண்ணெயைப் பயன்படுத்துவது இயற்கையான பளபளப்பைத் தருகிறது. இது ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான தோற்றத்தைத் தருகிறது

முடி உதிர்தலைத் தவிர்க்க

இந்த எண்ணெயின் வழக்கமான பயன்பாடு முடி நுண்குழாய்களை வலுப்படுத்துகிறது. இது முடி உதிர்தலைக் குறைக்கவும், அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது

அடர்த்தியான முடிக்கு

பாதாம் எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், காலப்போக்கில் அதிக, பெரிய மற்றும் முழுமையான முடி வளர்ச்சிக்கு பங்களிக்கிறது