குளிர்காலத்தில் உங்கள் உதடுகளை இளஞ்சிவப்பாகவும், மென்மையாகவும் பராமரிக்க சூப்பர் டிப்ஸ் இங்கே. இது குறித்து அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.
ஆரஞ்சு தோல்
குளிர்காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பு பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற ஆரஞ்சு தோல் மிகவும் பயனுள்ளதாகக் கருத்தப்படுகிறது. இதற்கு, 1 டீஸ்பூன் ஆரஞ்சு தோலின் பொடியை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் 10 முதல் 15 சொட்டு பாதாம் எண்ணெயைச் சேர்க்கவும். இதனுடன் சிறிது பிரவுன் சுகர் சேர்த்து கெட்டியான பேஸ்டை தயார் செய்து கொள்ளுங்கள். இதை உங்கள் உதடுகளில் தடவி சிறிது நேரம் வைத்திருக்கவும். பிறகு சுத்தமான நீரில் அலசவும். ஆரஞ்சு தோலின் பிரதிபலனை உங்கள் உதடுகளில் பார்க்க முடியும்.
மஞ்சள்
குளிர்காலத்தில் உதடுகளில் மஞ்சளை தடவுங்கள். இதனால் உதடுகளின் நிறம் அதிகரிக்கும். இதற்கு, 1 சிட்டிகை மஞ்சள் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பால் சேர்க்கவும். இப்போது இந்த பேஸ்டை உங்கள் உதடுகளில் தடவி சிறிது நேரம் வைத்திருக்கவும். பிறகு சுத்தமான நீரில் உதடுகளைக் கழுவலாம். வாரத்திற்கு 2-3 முறை, தடவி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய்
குளிர்காலத்தில் உதடுகளுக்குத் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் உதடு வெடிப்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம். இரவில் தூங்குவதற்கு முன் உதடுகளில் தேங்காய் எண்ணெய் தடவி கொண்டு தூங்கலாம். இது உங்கள் உதடுகளின் அழகை அதிகரிக்கும். இதைத் தவிர, தொப்புளில் தேங்காய் எண்ணெயை விட்டு, சிறிது நேரம் மசாஜ் செய்யலாம்.
தேன்
உதடுகளில் தேன் தடவினால், உங்கள் உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாறும். இதற்கு, 1 டீஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது பிரவுன் சுகர் மற்றும் வெந்நீரை கலக்கவும். இந்த கெட்டியான பேஸ்டை உங்கள் உதடுகளில் தடவவும். சுமார் 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இது உதடுகளின் அழகை மேம்படுத்த உதவுகிறது.
பாலேடு
குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு போகாமல் ஈரத்தன்மையுடன் மென்மையாக இருக்க உங்கள் உதடுகளுக்குப் பாலேடு தடவுங்கள். இதைத் தடவினால் உதடுகளின் பொலிவு அதிகரிக்கும். மேலும், இது உங்கள் உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றும்.