சருமம் மற்றும் கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் தரும் நன்மைகள் இங்கே

By Ishvarya Gurumurthy G
02 Aug 2024, 11:30 IST

ரோஸ் வாட்டரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது சருமம் மற்றும் முடி பிரச்னைக்கு தீர்வைத் தருகிறது.

பொடுகைக் குறைக்க

ரோஸ் வாட்டரில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உச்சந்தலையின் அரிப்பை அகற்றி, பொடுகைக் குறைக்க உதவுகிறது.

எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த

ரோஸ் வாட்டர் pH -ஐ சமநிலைப்படுத்துவது அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. இது உலர்ந்த உச்சந்தலை மற்றும் எண்ணெய் முடிக்கு ஏற்றதாக அமைகிறது.

இயற்கையான நறுமணத்திற்கு

ரோஸ் வாட்டர் செயற்கை வாசனை திரவியங்கள் போல் இல்லாமல், ரோஸ் வாட்டர் கூந்தலில் ஒரு இனிமையான மற்றும் இயற்கையான வாசனையைத் தருகிறது.

நீரேற்றமாக வைக்க

ரோஸ் வாட்டரைத் தலைமுடிக்கு பயன்படுத்துவது முடியின் ஆழமாக நிலைநிறுத்தி, ஈரப்பதமாகவும், மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது.

முடி வேர்களை வலுப்படுத்த

ரோஸ் வாட்டரில் உள்ள பண்புகள் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இது வலுவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

செல் சேதத்திலிருந்து பாதுகாக்க

ரோஸ் வாட்டரில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், சருமத்திற்கான ரோஸ் வாட்டர் பயன்பாடு முதுமை செயல்முறையை மெதுவாக்கவும், மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கவும் உதவுகிறது.

எரிச்சலூட்டும் சருமத்திற்கு

ரோஸ் வாட்டரில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் முகப்பரு, தோலழற்சி, அரிக்கும் தோலழற்சி மற்றும் சிவத்தல் போன்றவற்றைத் திறம்பட குறைக்கிறது.

தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க

ரோஸ் வாட்டரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும், தொற்றுநோய்களிலிருந்து விடுபட வைக்கவும், காயத்தைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

முகப்பரு வெடிப்பைக் குறைக்க

சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்துவது அவசியமாகும். ஏனெனில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியால் முகப்பரு வெடிப்பு ஏற்படலாம். இதற்கு ரோஸ் வாட்டர் மிகவும் சிறந்த தீர்வாகும். ரோஸ் வாட்டர் pH அளவை சமநிலைப்படுத்தி, அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து முகப்பரு வெடிப்பைக் குறைக்கிறது.