இந்த கெட்டு பழக்கங்கள் உங்கள் நகங்களை முற்றிலும் கெடுக்கும்!

By Karthick M
23 Feb 2024, 00:57 IST

நகம் ஆரோக்கிய நன்மைகள்

அழகான நகங்கள் உங்கள் கைகளின் அழகை அதிகரிக்கும். ஆனால் உங்களின் சில சிறிய பழக்கங்கள் கூட உங்கள் நகங்களை கெடுத்துவிடும்.

நெயில் பாலிஷ் ரிமூவர்

நகங்களின் அழகை அதிகரிக்க அடிக்கடி நெயில் பாலிஷ் போடுவீர்கள். ஆனால் அதை அகற்ற பயன்படுத்தப்படும் நெயில் பாலிஷ் ரிமூவரில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. இது இயற்கையான பளபளப்பை நீக்குகிறது.

நகம் கடித்தல்

நகம் கடிக்கும் கெட்ட பழக்கத்தால் உங்கள் நகங்கள் அசிங்கமாக மாறும். தவிர, இப்படி செய்வதால் உங்கள் நகங்களின் வடிவமும் கெட்டுவிடும்.

மோசமான உணவு

தவறான உணவுப் பழக்கங்களால் உங்கள் முழு உடலும் பாதிக்கப்படும். இதனால் நகங்களும் சேதமடைகின்றன. பச்சைக் காய்கறிகள், பழங்கள், நட்ஸ்கள் போன்ற ஆரோக்கியமான பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாயில் கடிப்பது

பலரும் நகங்களை வாயில் கடிக்கும் பழக்கங்களை கொண்டிருப்பார்கள். இது உடலுக்கும் கேடு விளைவிக்கும். எனவே முறையாக நெயில் கட்டர் பயன்படுத்தவும்.

நிறைய தண்ணீர் அவசியம்

தண்ணீர் பற்றாக்குறையால் நகம் காய்ந்து உடையும். எனவே உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். உங்கள் நகங்களை சேதப்படுத்தும் இந்த பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.