குளிர் காலத்தில் நகங்கள் உடைவது ஏன்? - தடுக்க செய்ய வேண்டியது என்ன?

By Kanimozhi Pannerselvam
07 Dec 2023, 11:30 IST

குளிரில் நகங்கள் அதிகமாக உடைவது ஏன்?

குளிர்ந்த காற்று சருமத்தை மட்டுமின்றி நகங்களையும் சேதப்படுத்துவதால் குளிர்காலத்தில் நகங்கள் உடையும் வாய்ப்பு உள்ளது. இந்த காற்றினால் உங்கள் நகங்கள் பலவீனமாகின்றன.

வைட்டமின் சி

நகங்களை வலுப்படுத்த, வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். கீரை, பீட்ரூட், தக்காளி, உளுந்து, எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

கெமிக்கல் பயன்பாடு கெடு தரும்

உங்கள் நகங்களில் ரசாயன பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இதன் காரணமாக, நகங்களின் இயற்கையான எண்ணெய் குறைந்து, அவை பலவீனமடையத் தொடங்குகின்றன.

ஹைட்ரேஷன்

குளிர்காலத்தில் நகங்கள் உடையும் பிரச்சனையை தவிர்க்க, அவற்றை அவ்வப்போது ஈரமாக வைத்திருக்க வேண்டும். மேலும் நகங்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும் கிரீம்களையும் பயன்படுத்தலாம்.

பயோட்டின் சப்ளிமெண்ட்ஸ்

குளிர்காலத்தில் நகங்களை வலுப்படுத்த, பயோட்டின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன் கட்டாயம் நீங்கள் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

கிளவுஸ் அணியுங்கள்

குளிர்காலத்தில் எப்போதும் கிளவுஸ் அணிவது, காற்றிலிருந்து நகங்களைப் பாதுகாக்கும். மேலும் அவை பலவீனமாகி உடைந்து போவதையும், நகங்களில் அழுக்கு சேர்வதையும் தடுக்கும்.