கருவளையங்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். எனினும், இதை கவனிக்கும் போதே கருவளையப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இந்த கருவளையங்களை நீக்க பாதாம் எண்ணெய் பெரிதும் உதவுகிறது
ஊட்டச்சத்து நிறைந்த
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் மோனோசாச்சுரேட்டட் போன்றவை உள்ளது. இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்கிறது
மென்மையான பண்புகள்
பாதாம் எண்ணெய் சிறந்த மென்மையாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுகிறது
வறட்சியைத் தடுக்க
பாதாம் எண்ணெய் ஈரப்பதம் மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிப்பதால், இது சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க உதவுகிறது
எப்படி பயன்படுத்தலாம்?
கருவளையங்களிலிருந்து விடுபட பாதாம் எண்ணெயைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்
நேரடியாக தடவுவது
கண்களின் கருமையான வட்டங்களில் பாதாம் எண்ணெயை நேரடியாக தடவலாம். இதற்கு விரல் நுனியில் 3 முதல் 4 சொட்டு பாதாம் எண்ணெயை எடுத்து படுக்கைக்கு முன் கருவளையங்களில் சமமாகத் தடவி, அடுத்த நாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்
தேனுடன் பாதாம் எண்ணெய்
தேன் ஒரு சிறந்த சரும மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. எனவே, தேனுடன் பாதாம் எண்ணெய் சேர்ப்பது கருவளையங்களைக் குறைக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கவும் உதவுகிறது
ஆலிவ் எண்ணெயுடன்
ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டிலும் அரை தேக்கரண்டி அளவு எடுத்து நன்றாகக் கலக்க வேண்டும். கண் இமைகள் மற்றும் கண்களுக்கு கீழ் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். பின் 2 நிமிடங்கள் மசாஜ் செய்து இரவு முழுவதும் விட்டு, காலையில் சாதாரண நீரில் கழுவலாம்
பாலுடன் பாதாம் எண்ணெய்
பாலில் உள்ள பண்புகள் அழகான மற்றும் பிரகாசமான சருமத்தைத் தருகிறது. பால், பாதாம் எண்ணெய் ஒவ்வொன்றிலும் அரை தேக்கரண்டி அளவு எடுத்து, கலந்து கருமையான வட்டங்களில் தடவலாம். இதை உலர வைத்து சிறிது நேரத்திற்குப் பின் சாதாரண நீரில் கழுவி விடலாம்