மழையில் சருமம் மற்றும் முடியை எப்படி பராமரிப்பது?

By Karthick M
04 Jul 2024, 01:07 IST

மழையில் வானிலை மிக மோசமாக மாறுகிறது. இதனால் முடி மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை எப்படி தடுப்பது என பார்க்கலாம்.

சன்ஸ்கிரீன் போடலாம்

அனைத்து கட்டத்திலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. மழைக்காலத்தில் சருமத்தை பராமரிக்க சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டாம்.

உடலை ஈரப்பதமாக்கும்

காலநிலை மாற்றத்தால் கை, கால்களின் தோல் வறண்டு போகும். எனவே குளித்த பிறகு உடல் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம்.

நீரேற்றமாக இருப்பது முக்கியம்

வானிலை மாற்றத்தால் உடலில் நீர்ச்சத்து குறையும். நாமும் பெரிதாக நீராகாரம் எடுத்துக் கொள்ளமாட்டோம். உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிக முக்கியம்.

வெப்ப கருவிகளை பயன்படுத்த வேண்டாம்

காலநிலை மாற்றத்தால் உச்சந்தலையில் வறட்சி ஏற்படும். எனவே இந்த பருவத்தில் வெப்ப கருவிகளை பயன்படுத்த வேண்டாம். இது முடி உதிர்தலை ஏற்படுத்தும்.

எண்ணெய் முக்கியம்

காலநிலை மாற்றத்தால் முடி பொடுகு மற்றும் வறண்டு போகத் தொடங்குகிறது. முடியை வலுப்படுத்த நீங்கள் தலையில் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.