உங்கள் மனதிற்கு பிடித்த நபரிடம் உங்கள் காதலை தனித்துவமான முறையில் தெரிவிப்பது என நீங்கள் யோசிப்பவரா? உங்களுக்கான சில உதவிக்குறிப்புகளை நாங்க தருகிறோம்.
சிவப்பு ரோஜா
காதலின் அடையாளமாக பார்க்கப்படும் சிவப்பு ரோஜா பூவை உங்கள் மனதிற்கு பிடித்த நபருக்கு பரிசாக அளித்து, அவர் முன் மண்டியிட்டு உங்கள் காதலை தெரிவிக்கலாம்.
இதய வடிவ பலூன்
ரோஜாவை போலவே, இதய வடிவிலான பலூனை பரிசாக அளிப்பதும் உங்கள் காதலை தெரியப்படுத்த உதவும். குறிப்பாக சிவப்பு நிற பலூனை தேர்வு செய்வது நல்லது.
மோதிரம்
அழகான மோதிரம் ஒன்றை உங்கள் மனதிற்கு பிடித்த நபருக்கு பரிசாக அளித்து உங்கள் காதலை தெரிவிக்கலாம். மோதிரத்தில் உங்கள் பெயரின் முதல் எழுத்து மற்றும் உங்க காதலி பெயரின் முதல் எழுத்தை பதிக்கலாம்.
திரைப்பட இடைவேளை
உங்கள் மனதிற்கு பிடித்த நபரை ரொமாண்டிக் படம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, அத்திரைப்படத்தின் இடைவேளையின் போது உங்கள் காதலை அனைவரது முன்பும் தெரியப்படுத்தலாம்.
முதலில் சந்தித்த இடம்
உங்கள் மனதிற்கு பிடித்த நபரை நீங்கள் முதன் முதலில் எங்கு சந்தித்தீர்களோ அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு உங்கள் காதலை தெரிவிக்கலாம்.
சாகச விளையாட்டு
பன்ஜி ஜம்பிங், ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளில் உங்கள் மனதிற்கு பிடித்த நபரை ஈடுபட வைத்து, அவரிடம் உங்கள் காதலை தெரிவிக்கலாம். இது அவரின் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக இருக்கும்.
குறிப்பு
உங்கள் மனதிற்கு பிடித்த நபரிடம் உங்கள் காதலை நீங்கள் தெரிவிக்கும் முன், அவருக்கு உங்களை பிடித்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களை விரும்பாத நபரிடம் உங்கள் காதலை பகிரங்கமாக தெரிவிப்பது பிரச்சனைக்கு வழிவகுக்கும்.