தேங்காய் எண்ணெய் முடி பராமரிப்பு மட்டுமல்லாமல் சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்களுக்குக் கீழ் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது
வீக்கத்தைக் குறைக்க
தேங்காய் எண்ணெய் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை கண்களின் புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு கண்களுக்குக் கீழ் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
கருவளையங்களைக் குறைக்க
தேங்காய் எண்ணெயில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமத்தின் அமைப்பை மேம்படுத்தவும், கருவளையங்களின் தோற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது
சுருக்கங்கள் நீங்க
இதில் உள்ள அதிகளவிலான வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் முன்கூட்டிய வயதை ஊக்குவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் மூலம் சுருக்கங்களை நீக்கலாம்
ஆழமான ஈரப்பதத்திற்கு
கண்களுக்கு கீழே தேங்காய் எண்ணெயைத் தடவுவதன் மூலம், அதன் கொழுப்பு அமிலங்கள் கண்களுக்கு கீழ் வறட்சியைத் தடுத்து ஆழமான ஈரப்பதத்தை வழங்குகிறது
கொலாஜனை அதிகரிக்க
சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இது சருமத்தில் நெகிழ்ச்சி மற்றும் கண்களின் கீழ் உறுதியை மேம்படுத்துகிறது
எரிச்சலைத் தவிர்க்க
கண்களுக்குக் கீழே எண்ணெய் பயன்படுத்துவது அதன் எரிச்சலைத் தவிர்க்க உதவுகிறது. இதற்கு இதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் குணப்படுத்தும் பண்புகளே காரணமாகும்
எப்படி பயன்படுத்துவது?
கண்களுக்குக் கீழே சிறிது தேங்காய் எண்ணெயை மெதுவாக தேய்க்க வேண்டும். இதை வட்ட இயக்கத்தில் லேசாக மசாஜ் செய்து ஓர் இரவில் விடலாம்