முடி, சருமத்தை பொலிவாக்கும் ஆப்பிள் சைடர் வினிகர்!

By Gowthami Subramani
18 Jun 2024, 17:30 IST

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிளைக் கொண்டு தயார் செய்யப்படும் இந்த சாற்றில் வைட்டமின்கள் பி மற்றும் சி போன்றவை நிறைந்துள்ளது. இது முக்கியமாக சமையல் மற்றும் சாலட் டிரஸ்ஸிங்கில் பயன்படுத்தப்படுகிறது. இதனை அருந்துவதால் சில அழகு நன்மைகளும் கிடைக்கிறது

மென்மையான சருமத்திற்கு

இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் அசிட்டிக் அமிலம் போன்றவை சருமத்தை மென்மையாக்குகிறது. மேலும் ACV-ல் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் உள்ளது. இவை சருமத்தின் மேலடுக்கில் உள்ள இறந்த சருமத்தை அகற்ற உதவுகிறது

முகப்பருவை எதிர்த்துப் போராட

ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் ஆன்டிவைரல் பொருளாகும். இவை பாக்டீரியாவை விலக்கி முகப்பருக்களை சருமத்திலிருந்து நீக்க உதவுகிறது

சுருக்கங்களைக் குறைக்க

இது ஒரு இயற்கையான துவர்ப்பானாக செயல்பட்டு, எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. மேலும் சருமத்தில் தோன்றும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைத்து மென்மையாக உணர வைக்கிறது

பொடுகிலிருந்து விடுபட

உச்சந்தலையில் வளரும் அதிக ஈஸ்ட் அளவுகளுக்கு உடலின் அழற்சி எதிர்வினையாக உருவாவதே பொடுகு ஆகும். ஆப்பிள் சைடர் வினிகர் இந்த வளரும் ஈஸ்டின் அளவைக் குறைத்து பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட வைக்கிறது

pH அளவை நடுநிலையாக்க

ஆப்பிள் சைடர் வினிகர் சருமத்தின் pH அளவை மாற்றவும், பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது

எவ்வளவு உட்கொள்ளலாம்?

ஆப்பிள் சைடர் வினிகரை 15 மில்லி முதல் 30 மில்லி வரை, சுமார் 240 மில்லி தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்ய வேண்டும். இதை உணவுக்கு முன் 1-2 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதை சருமத்தில் ஒருபோதும் நேரடியாக பயன்படுத்த வேண்டாம்