தினமும் 30 நிமிடம் மெதுவாக ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
31 Jul 2024, 17:30 IST

மெதுவான வேகத்தில் ஓடுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்த பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் மெதுவாக ஓடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

உடல் எடை குறைய

உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த தீர்வாக மெதுவாக ஓடுதல் பயிற்சி அமைகிறது. இது உடலில் கலோரிகளை எரிக்கவும், சமச்சீரான உடல் எடையைப் பராமரிக்கவும் உதவுகிறது

இதய ஆரோக்கியம்

மெதுவாக ஓடுவது இதயத்தை பலப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இதயத் துடிப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஆக்ஸிஜனை தசைகளை அடைவதை எளிதாக்குகிறது

காயத்தைத் தடுக்க

மெதுவான வேகத்தில் ஓடுவது தசைகள் மற்றும் மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை உருவாக்குகிறது. இது சிறிய காயங்களைக் கொண்டிருப்பவர்கள் அல்லது காயத்திற்கு ஆளானவர்களுக்கு பாதுகாப்பானதாக அமைகிறது

ஏரோபிக் திறன்

மெதுவாக ஓடுவது ஏரோபிக் திறனை மேம்படுத்த உதவுகிறது. இது வேலை செய்யும் போது தசைகள் ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் திறனை மேம்படுத்துகிறது

குறைந்த மன அழுத்தம்

மெதுவாக ஓடுவது எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இவை இயற்கையாகவே மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்தவும் உதவுகிறது

சமூகத் தொடர்புகள்

மெதுவான வேகம் உரையாடலை நடத்த அனுமதிக்கிறது. இது மன மற்றும் உடல் ஆரோக்கிய நலன்களை வழங்கக் கூடிய சமூக இணைப்புகளை வளர்க்கிறது