வழக்கமான நடைப்பயிற்சிக்கு மாற்றாக நோர்டிக் நடைபயிற்சி தனித்துவமான நடைபயிற்சி ஆகும். இந்த சிறப்பு நடைபயிற்சி கம்புகளைப் பயன்படுத்தி முன்னோக்கி நடப்பதை உள்ளடக்கியதாகும். இது முழு உடலையும் ஈடுபடுத்தி, முழு உடலுக்கும் ஒரு பயிற்சியை வழங்குகிறது. இதில் நோர்டிக் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
கலோரிகளை எரிக்க
வழக்கமான நடைப்பயணத்தை விட நோர்டிக் நடைப்பயணம் உடலில் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. குச்சிகளைப் பயன்படுத்துவது அதிக தசைக் குழுக்களை ஈடுபடுத்துவதால், அதிக கலோரி செலவை ஏற்படுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
நோர்டிக் நடைபயிற்சி செய்வது கெட்ட LDL கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்க உதவுகிறது. அதே சமயம் நல்ல HDL கொழுப்பை அதிகரிக்கிறது. இது எடையிழப்பை ஊக்குவிக்கவும், கொழுப்பு நிறைவைக் குறைக்கிறது. மேலும் இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
வலிமையை அதிகரிக்க
வழக்கமான நடைப்பயணத்தைப் போலல்லாமல், நோர்டிக் நடைப்பயணம் மேல் மற்றும் கீழ் உடலை உள்ளடக்கியதாகும். இது கைகள், தோள்கள், மைப்பகுதியை ஈடுபடுத்துகிறது. இது கால் தசைகளுக்கு கூடுதலாக தசைகளையும் பலப்படுத்துகிறது
மைய தசைகளை பலப்படுத்த
கம்புகளைப் பயன்படுத்தி நடக்கும்போது, மைய தசைகளை ஈடுபடுத்தி பலப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, அது மேம்பட்ட நிலைத்தன்மை மற்றும் உடல் தோரணைக்கு வழிவகுக்குகிறது
எலும்பு, தசைகளை வலுவாக்க
நோர்டிக் நடைபயிற்சி எடை தாங்கும் பயிற்சியாகும். இது தசை வலிமை மற்றும் எலும்பு அடர்த்தியைப் பராமரிக்க சிறந்தது. இது வயதாகும் போது வலுவான எலும்புகள் மற்றும் தசைகளைப் பராமரிக்க உதவுகிறது
மூட்டு வலியைக் குறைக்க
கம்புகளைப் பயன்படுத்தி நடப்பது உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. இதன் மூலம் முதுகு, முழங்கால்கள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கலாம்
மன அழுத்தத்தைக் குறைக்க
இந்த உடற்பயிற்சி செய்வது மன அழுத்தம், பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது. கம்புகளைப் பயன்படுத்தி நடைபயிற்சி செய்வது தளர்வு மற்றும் மன நலனை ஊக்குவிக்கிறது