வழக்கமான உடற்பயிற்சி நாள்பட்ட நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை நிர்வகிக்க உதவுகிறது. இது உடல் எடை மேலாண்மையைத் தவிர பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது
எடைக்கட்டுப்பாடு
உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உடற்பயிற்சி சிறந்த தேர்வாகும். எனவே உணவுப்பழக்கத்துடன் உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
இரத்த சர்க்கரை நிர்வகிக்க
உடற்பயிற்சி செய்வது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதுடன், இன்சுலினை சிறப்பாக செயல்பட உதவுகிறது. இது வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது
எலும்பு, தசைகளை வலுவாக்க
குழந்தைகள் சிறுவயது முதலே வழக்கமான உடற்பயிற்சி செய்வது எலும்புகளை வலுவாக்க உதவும். இது பிற்காலத்தில் ஏற்படும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும்
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க
பெருங்குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களில் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
மன ஆரோக்கியத்திற்கு
உடற்பயிற்சியின் போது வெளியிடப்படும் இரசாயனங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது. கூடுதலாக, மன அழுத்தத்தைச் சமாளிக்கவும், மனச்சோர்வு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
சீரான தூக்கத்திற்கு
விரைவாக மற்றும் நீண்ட நேரம் தூங்குவதை உறுதிப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது. இதன் மூலம் சீரான தூக்கத்தை பெறலாம்
சிந்தனைத் திறன் அதிகரிக்க
உடற்பயிற்சி செய்வது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது
நீண்ட கால வாழ்விற்கு
தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கமான நோய்களைத் தவிர்த்து மரணத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. நீண்ட கால வாழ்விற்கு வழிவகுக்கிறது