சிக்ஸ் பேக் கொண்டுவர ஒருவர் என்ன சாப்பிட வேண்டும்?

By Karthick M
29 Apr 2024, 14:10 IST

சிக்ஸ் பேக் பெற வேண்டும் என பலர் தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் இதற்கு உணவில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இது விரைவில் வயிற்றை சிக்ஸ் பேக் உடன் மாற்ற உதவும்.

உணவில் மாற்றம் முக்கியம்

வயிற்றை உருவாக்க உங்கள் உணவில் சில ஆரோக்கியமான பொருட்களை சேரத்துக் கொள்வது அவசியம். வயிற்று பகுதியை இருக்க உடலுக்கு தேவையான புரதச்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

முட்டைகள் சாப்பிடலாம்

சிக்ஸ் பேக் பெற முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் ஏராளமான புரதச் சத்து உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் முட்டைக்கு பதிலாக சீஸ், பருப்பு போன்றவற்றை உண்ணலாம்.

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகளை சாப்பிடுவது உடலுக்கு தேவையான பல சத்துக்களை வழங்குகிறது. இது வயிற்றை உருவாக்கி இறுக்குவதற்கு உதவுகிறது.

தயிர் அவசியம்

சிக்ஸ் பேக் பெற தயிரை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள சத்துக்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

மேம்பட்ட உணவுகள்

முழு தானியம் சாப்பிடுவது நல்லது. அதேபோல் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இவற்றை உண்பதன் மூலம் உங்கள் உடலை கட்டமைப்பாகவும் வயிறு வலுவாகவும் இருக்கும்.